தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பம்- வெங்கையா நாயுடு - Venkaiah Naidu

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்) உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை தயாரிக்க வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

Venkaiah Naidu
Venkaiah Naidu

By

Published : Aug 20, 2021, 7:46 PM IST

பெங்களூரு : பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்துக்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு முதல்முறை பயணம் மேற்கொண்டார். அவருடன் கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டும் சென்றிருந்தார்.

அங்கு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, எச்.ஏ.எல்., மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் (ஏடிஏ) மூத்த அலுவலர்களிடம் உரையாற்றினார்.

விண்வெளி கட்டமைப்பு

அப்போது அவர் கூறுகையில், “விண்வெளி மற்றும் பாதுகாப்பில் உள்ள இந்த உள்கட்டமைப்பைப் பார்த்த பிறகு, நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை குறித்து நான் உறுதியாக இருக்கிறேன்.

எச்.ஏ.எல்.,லின் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களில் நடந்து வரும் பொது-தனியார் கூட்டாண்மைக்கு எனது பாராட்டுகள். சிக்கலான புவியியல் அரசியலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

பாராட்டு

மேலும் எச்.ஏ.எல்., குறித்து கூறுகையில், “எச்.ஏ.எல் ஒரு உலகளாவிய பண்புகளைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளி மற்றும் பாதுகாப்பில் இந்தியாவின் தன்னம்பிக்கை கனவை நனவாக்குவதில் நிறுவனத்திற்கு இந்நிறுவனம் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்நிறுவனம் தொடங்கப்பட்டு 80 ஆண்டுகளாக வீறுநடைபோடுவது பெருமையளிக்கிறது. நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு எச்.ஏ.எல். பெரும் பங்கு அளிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க : பிராந்திய மொழிகளில் கல்வி - வெங்கையா நாயுடு வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details