டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பான் என்ற ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்திக் கப்பான் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு - New Delhi
ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட சித்திக் கப்பானின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்திக் கப்பான் மருத்துவ அறிக்கையை கோரும் உச்ச நீதிமன்றம்
அண்மையில் கழிவறையில் வழுக்கி விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனைக் கட்டிலில் அவர் விலங்கிட்ட நிலையில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றத. அப்போது எதிர்தரப்பு குற்றச்சாட்டை அரசு வழக்கறிஞர் மறுத்தார். இதைத்தொடர்ந்து சித்திக் கப்பானின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.