வாஷிங்டன் :அமெரிக்காவில் எச்-1பி விசாவுக்கான குலுக்கல் முறையில் தனியார்கள் நிறுவனங்கள் முறைகேடுகள் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அநாட்டு குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள் ஐடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர். எச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறி பணியாற்றி வருகின்றனர்.
எச்-1பி விசா மூலம் பெரும்பாலும் குடியேறுபவர்கள் மென்பொருள் நிறுவனத் துறையில் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலே எச்-1பி விசா மூலம் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டி எச்-1பி விசா கோரப்படும் நிலையில், குழுக்கள் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எச்-1பி விசா குலுக்கல் முறையில் சிறிய நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொழில் நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை எச்-1பி விசாவுக்கான விண்ணப்பங்களை குலுக்கல் முறைக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.