மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் சந்துபுரா கிராமத்தில் மார்ச் 31ஆம் தேதி போலி மதுபானம் அருந்திய 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர், உயிரழந்தவர்களின் பெயர் பிரதீப் அகிவார் மற்றும் விஜய் கேசவ் என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைப் பெறுபவர்களின் பார்வையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.