குவாலியர் (மத்தியபிரதேசம்):குவாலியர் நகரில் பட்டப்பகலில் ரூ.1.20 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை 6 மணி நேரத்தில் போலீசார் கண்டறிந்துள்ளனர். நிறுவன ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேரை கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கைப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்களான பிரமோத் குர்ஜார் மற்றும் சுனில் ஷர்மா இருவரும் ஒவ்வொரு வாரமும் நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய தொகையுடன் வங்கிக்குச் செல்வார்கள்.
அதனால் அந்த பணத்தை கொள்ளையடிக்க எண்ணியவர்கள், மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து, நகரின் மிகப்பெரிய கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தினர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது கொள்ளையடிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.