ஸ்ரீநகர்: தென் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் உஸ்கம் பாத்ரி பகுதியில் இன்று (டிசம்பர் 14) அதிகாலைபாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார் என காவல் உயர்அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதியின் பெயர் ஃபெரோஸ் அகமது தார். இவர், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
புல்வாமா துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி மரணம் அகமது தார், பயங்கரவாத அமைப்புகளில் 2017ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறார். இவர் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களையும் அரங்கேற்றியுள்ளார்" என்றார்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அகமது தார் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
குறிப்பாக, இந்தச் சம்பவம் நடந்த பகுதியானது, நேற்று முன்தினம் ரிசர்வ் காவல் படையினரின் பேருந்து மீது தாக்குதல் நடந்த பகுதிக்கு 30 கி.மீ. சுற்றளவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீநகர் தாக்குதல்: மரணித்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்வு!