தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் விடுதி நடத்தி வந்த குஜராத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் படேல் என்பவர், விடுதியில் வாடிக்கையாளருடன் ஏற்பட்ட தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Gujarati
Gujarati

By

Published : Jul 3, 2022, 7:37 PM IST

சூரத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் படேல்(69) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தெற்கு கரோலினா மாகாணத்தில் நெடுஞ்சாலை விடுதி (Motel) ஒன்றையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி ஜெகதீஷ் படேல் விடுதியின் அலுவலக அறையில் இருக்கும்போது, வாடிக்கையாளர் ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாடிக்கையாளர் இரண்டு நாட்களாக கட்டணம் செலுத்தாமல் தங்கியிருந்ததாகவும், கட்டணம் செலுத்தாமல் நீண்ட நாட்கள் தங்க அனுமதி கேட்டதாகவும் தெரிகிறது. இதற்கு படேல் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே அந்த வாடிக்கையாளர் திடீரென துப்பாக்கியை எடுத்து படேலின் தலையிலும் வயிற்றிலும் சுட்டுவிட்டு தப்பியுள்ளார். விடுதி ஊழியர்கள் படேலை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஐந்து நாட்களாக சிகிச்சையில் இருந்த படேல், கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கணவன் - மனைவி பிரச்னைக்கு இதெல்லாம்தான் காரணமா? - தீர்வு இதோ...!

ABOUT THE AUTHOR

...view details