குஜராத்: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஏ பட்டதாரிகஷ்மா பிந்து (24). இவர் தற்போது வதோதராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பிந்துவிற்கு திருமணம் நடைபெறவிருக்கிறது; சற்று வித்யாசமாக. மணமகன் என யாரும் கிடையாது. பிந்து தன்னை தானே விரும்பி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 11ஆம் தேதி, பிந்து கோத்ரி கோயிலில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான திருமண விழாவில் உள்ள அனைத்து சடங்குகள், பழக்கவழக்கங்கள் பின்பற்றி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த புதுவித திருமணம் குறித்து கஷ்மா பிந்து கூறுகையில், "எனக்கு திருமணம் செய்துகொள்ள விரும்பமில்லை. ஆனால் மணப்பெண் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் என்னை நேசிக்கிறேன், அதனால் நான் என்னை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இதற்கு முன்னர் இந்தியாவில் வேறு யாரேனும் தங்களைத் தாங்களே திருமணம் செய்துகொண்டார்களா என இணையத்தில் தேடிப் பார்த்தேன். அப்படி யாரும் செய்யவில்லை எனத் தெரியவந்தது. எனவே, நான் நாட்டில் சுய-அன்புக்கு முன்மாதிரியாக இருக்க போகிறேன்.