தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்! - மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

சூரத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.

Gujarat
Gujarat

By

Published : Sep 11, 2022, 5:36 PM IST

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்றிரவு(செப்.10) ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

சுமார் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூன்று ஊழியர்கள் மாயமானதாகத் தெரிகிறது. பாய்லர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாடு வானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details