குஜராத்: பன்ஸ்கந்தா மாவட்டம் லுன்சேலா நகரில் குஜராத்தி சாமியார் சந்த் ஸ்ரீ சாதாராம் பாபாவின் சிலை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி தங்க சமூக பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்த 11 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.
இதில், திருமணமாகாத தாக்கூர் சமூக பெண்கள், செல்போன் உபயோகிக்க தடை விதிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமண விழாக்களில் டி.ஜே(DJ) பார்ட்டிகளை தடை செய்யப்பட்டது. திருமண பரிசுகளுக்கு பதிலாக பணம் வழங்குவது, தம்பதிகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களை மட்டும் திருமண பரிசாக வழங்குவது என தெரிவிக்கப்பட்டது.
திருமணம் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் 11 பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும், திருமணத்தின் போது 51 நபர்களுக்கு மட்டும் அனுமதி, ஜாதி வாரியாக சமூக திருமணங்கள் நடத்தப்பட வேண்டும், புதுமண தம்பதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கச் செல்லும் போது பணம் வழங்கக் கூடாது, திருமணம் மற்றும் நிச்சயதார்த்ததை நிறுத்துபவர்களுக்கு தண்டனை கிடையாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.