தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Dog Bites kid: சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்: சிசிடிவி வெளியீடு! - சிசிடிவி வீடியோ

குஜராத்தில் சாலையில் சுற்றித் திரிந்த நாயிடம் விளையாட ஓடி வந்த சிறுமியை தாக்கி, கன்னத்தை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.

Dog
Dog

By

Published : Jan 9, 2023, 9:52 PM IST

சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்: சிசிடிவி வெளியீடு..

குஜராத்: சூரத் மாவட்டத்தின் ஹான்ஸ் சொசைட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தன் வீட்டின் முன் சுற்றித் திரிந்த நாயைக் கண்டு ஆசையோடு அதனோடு விளையாட விரும்பி உள்ளார். சாலையில் ஓடி வந்த சிறுமியை திடீரென கொடூரமாக தாக்கிய நாய், அவளது கன்னத்தை கடித்து குதறியது.

வலியால் துடிதுடித்த சிறுமி, தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதைக் கண்டு அங்கிருந்து வந்த பெண், நாயிடம் இருந்து சிறுமியை காப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். வெறிப் பிடித்தது போல் காணப்பட்ட நாய், அந்த பெண்ணையும் கடித்து குதற முயற்சித்தது. அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வரவே நாய் தப்பி ஓடியது.

இந்தச் சம்பவம் அனைத்தும் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:ICICI Bank Case: சந்தா கோச்சர், தீபக் கோச்சருக்கு ஜாமீன் - மும்பை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details