தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தந்தையை கொன்ற வீடியோ கேம்; பாசக்கார மகன் கைது! - குஜராத்தில் தந்தை கொலை

செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடக்கூடாது எனக் கண்டித்த தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat
வீடியோ கேம்

By

Published : Sep 3, 2021, 6:42 PM IST

குஜராத் மாநிலத்தில் சொந்த மகனே தந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சூரத்தில் உள்ள ஹசிரா பகுதியில் தான் நடந்துள்ளது. தனது தந்தை கழிவறையில் வழுக்கிவிழுந்து இறந்துவிட்டதாக உறவினர்களிடம் அவரது 17 வயது மகன் கூறியுள்ளான். ஆனால், அவரது உடற்கூராய்வு அறிக்கையில் அவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் அவரது மகனிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர். அதில், இறுதியாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடியதற்கு தந்தை கண்டித்ததால், கழுத்தை நெறித்து கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் தனது தாயையும் பாசக்கார மகன் ஏமாற்றியிருந்தார். வழக்கின் இறுதி விசாரணையின்போது மகனின் உண்மையான சுயரூபத்தை அவரது தாயார் அறிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விவாகரத்தான நபர்கள் குறி... போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details