தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு.. கோர விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.. - Navsari bus accident

குஜராத் மாநிலம் நவ்சாரியில் பேருந்தும் காரும் மோதிக் கொண்டதில் 10 உயிரிழந்ததனர். பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் கோர விபத்து
குஜராத்தில் கோர விபத்து

By

Published : Dec 31, 2022, 8:24 AM IST

Updated : Dec 31, 2022, 8:52 AM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி அருகே பேருந்தும் காரும் மோதிக் கொண்டதில் 10 உயிரிழந்ததனர். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நவ்சாரி போலீசார் கூறுகையில், இந்த விபத்து வெஸ்மா கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 31) அதிகாலையில் நடந்துள்ளது.

சூரத்தில் இருந்து வல்சாத் நோக்கி புறப்பட்ட சொகுசு பேருந்து வெஸ்மா அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் தடுப்பை மீறி எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 9 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் இருந்த 11 பேருக்கு பலத்த காயங்களும் 30 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் நவ்சாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தில் உள்ள கோலக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், காரில் பயணித்தவர்கள் பருச் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது

Last Updated : Dec 31, 2022, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details