தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்! - குஜராத் தேர்தல்

அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் பட்டேல் இன்று (ஜூன்2) பாஜகவில் இணைந்தார்.

ஹர்திக் பட்டேல்
hardik patel

By

Published : Jun 2, 2022, 2:33 PM IST

ஆமதாபாத்: கடந்த 2015ஆம் குஜராத்தில் பட்டிதார் சமூகத்தின் இட ஒதுக்கீடுக்காக பல போராட்டங்களை நடத்திய ஹர்திக் பட்டேல், 201ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

அதில் நாட்டின் நலன்களுக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டையாக மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் குஜராத் மாநில பாஜக தலைவர் பட்டில் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் பட்டேல், நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையில் தான் சிறு சிப்பாயாக வேலை செய்ய உள்ளேன் என்றும் தேச நலன் , சமூக நலன் கருதி இந்த பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்

ABOUT THE AUTHOR

...view details