தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: ஆட்சியை தக்கவைக்க பாஜகவின் வியூகங்களும் சவால்களும் - குஜராத் சட்டப்பேரவை தேர்தல்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று மும்முனை போட்டியை சந்திக்கவுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பரேக்.

Gujarat Polls: BJP's bid to retain power and its challenges
Gujarat Polls: BJP's bid to retain power and its challenges

By

Published : Nov 18, 2022, 9:37 PM IST

Updated : Nov 19, 2022, 12:59 PM IST

காந்திநகர்:குஜராத் மாநிலம் 1962ஆம் ஆண்டில் முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது முதல் இதுவரை, மொத்தமாக 14 சட்டப்பேரவை தேர்தல்களை பார்த்துவிட்டது. ஆனால், ஒருபோதும் மந்தமானதாகவோ சுறுசுறுப்பற்றோ காணப்பட்டதில்லை. எப்போதும் தேர்தல் களம் சூடு பிடித்தே இருந்துள்ளது. 2001ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் வருகைக்கு பின் அரசியல் களம் மேலும் தீவிரமடைந்தது.

2022ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதலமைச்சராக வெற்றி பெற்றார். இந்த வெற்றி 2007 மற்றும் 2012ஆம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர்ந்தது. அதன்பின் நரேந்திர மோடி பிரதமானார். இருப்பினும் குஜராத்தில் பாஜக ஆட்சியே தொடர்கிறது. நரேந்திர மோடி பிரதமராகிவிட்டாலும் ஒவ்வொரு குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போதும் சூறாவளி பரப்புரை செய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை. 2017ஆம் சட்டப்பேரவை தேர்தலிலும் அதையே செய்தார்.

அப்போது பாஜக 182 இடங்களில் போட்டியிட்டு 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு கூடுதலாக 12 இடங்கள் கிடைத்தன. மறுப்புறம் காங்கிரஸ் இடங்கள் 60ஆக குறைந்தன. இப்போது பாஜகாவின் பூபேந்திரபாய் படேல் முதலமைச்சாரக உள்ளார்.

அடுத்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் மொத்தமாக 182 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 13 தொகுதிகள் பட்டியின சாதியினருக்கும், 27 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் என மொத்தமாக 4.91 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தாண்டு 3.25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கான பரப்புரை பணியினை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம். குஜராத் மாநிலம் மாநிலம் முழுவதும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்று, பொதுமேடைகளில் பரப்புரை செய்யத்தொடங்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு வரை தேர்தல் வியூகங்கள் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துவந்தன. ஏனென்றால் காங்கிரஸ் வலுவான போட்டியாளராக இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது பாஜகவின் வாக்குகள் சிதறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் களமிறங்கியுள்ளது. நாட்டில் பாஜக, காங்கிரஸ் தவிர மற்றொரு கட்சி பிற மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது என்றால் அது ஆம் ஆத்மி கட்சியே. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்தது மட்டுமல்லாமல் வெற்றிக்கனியை பறிப்பது யார் என்று யூகிப்பதில் மிக்கப்பெரும் ஐயமும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றாலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அபார வெற்றிபெற்றது.

அதுபோலவே கடந்த சில மாதங்களாகவே குஜராத்தில் எதிர்க்கட்சியின் வெற்றிடத்தை நிரப்பியது. பிரதமர் மோடியை போலவே குஜராத்தில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டார். காங்கிரஸின் சரிவை பயன்படுத்திக்கொண்டு ஆம் ஆத்மி கட்சி சரியான நேரத்தில் காலூன்ற தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பஞ்சாப் தேர்தலின்போது மக்களே முதலைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்தது. அதன்படியே தொலைக்காட்சி நகைச்சுவையாளர் பகவந்த் மான் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். அந்த யுக்தியையே குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி பயன்படுத்தியுள்ளது.

பிரபல குஜராத்தி தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இசுதன் காத்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபுறம் பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா பூபேந்திர படேல் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த தேர்தலிலேயே பாஜக எதிர்பார்த்த இடங்களை பிடிக்கவில்லை. இந்த நிலையில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளும், பாஜகவுக்கு வராமல் ஆம் ஆத்மிக்கு போக வாய்ப்புள்ளது என்றும் அதேபோல பாஜக எதிர்ப்பு ஓட்டுகளும் காங்கிரஸ் கட்சிக்கு போகாமல் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்லும் என்றும் தேர்தல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க கடினமாக உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

1980களுக்கு பிறகு குஜராத்தில் காம்-க்ஷத்ரியர், ஹரிஜன், பழங்குடியின மக்கள், முஸ்லிம்கள் என வாக்கு வங்கிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனுடன் பட்டியலின மக்களும் வெற்றியை தீர்மானிக்கும் வங்கிகளாக மாறினர். இந்த சாதி வாக்குவங்கிகள் 1990களில் பாஜகவுக்கு உதவியது. அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துவந்த படேல் வாக்கு வங்கியும் காவி சக்திகளுக்கு ஆதரவளித்தது. அப்போதிலிருந்து குஜராத் மாநிலம் இந்துத்துவா அரசியலுக்கு பழகிவிட்டது.

இருப்பினும் 1994ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பின் 1995ஆம் ஆண்டு கேசுபாய் படேலின் தலைமையில் 121 இடங்களைப் பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அடுத்தவந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. அதன்காரணமாகவே 1998ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவியது. அந்த ஆண்டிலிருந்து பாஜகவே குஜராத்தில் ஆட்சி அமைத்துவருகிறது.

அதைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி 127 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலிலேயே குஜராத்தில் பாஜகவுக்கு அதிகபட்சமாக தொகுதிகள் கிடைத்தன. அப்போதுதான் தேசிய அளவில் நரேந்திர மோடியின் பெயர் பரவத்தொடங்கியது. 1990ஆம் முதல் ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் பாஜகவே முன்னிலை பெற்றுவருகிறது. ஆனால், இந்தாண்டு ஆம் ஆத்மி என்னும் முக்கிய போட்டியாளரை பாஜக சமாளிக்க வேண்டும்.

ஆம் ஆத்மி மின்சார கட்டணம் ரத்து, பழைய ஓய்வூதிய முறை அமல், தரமான கல்வி என வாக்குறுதிகளை கொடுத்துவருகிறது. இந்த வாக்குறுதிகளை ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நிறைவேற்றியுள்ளது. இதனால் பாஜக மேலும் உழைக்க வேண்டியுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படிங்க:Exclusive: காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது குப்பையில் வாக்குகளை போடுவதுபோலாகும் - அரவிந்த் கெஜ்ரிவால் பிரத்யேக நேர்காணல்

Last Updated : Nov 19, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details