தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி வேட்பாளர் இசுதன் காத்வி பின்னடைவு - Gujarat poll results

குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி பின்னடைவை சந்தித்துவருகிறார். பாஜகவின் ஹர்தாஸ் பாய் முன்னிலையில் உள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவுகள்
குஜராத் தேர்தல் முடிவுகள்

By

Published : Dec 8, 2022, 1:42 PM IST

கம்பாலியா: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்துவருகிறது. பாஜக 152 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதன் காத்வி கம்பாலியா தொகுதியில் போட்டியிட்டார்.

இவர் 14,761 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஹர்தாஸ் பாய் விட பின்தங்கியுள்ளார். மதியம் 12.50 மணி வரையிலான நிலவரப்படி, காத்வி 35,785 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ஹர்தாஸ் பாய் பெரா 48,862 வாக்குகளையும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் அஹிர் விக்ரம்பாய் அர்ஜன்பாய் மடம் 28,158 வாக்குகள் பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. குஜராத்தில் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் 182 மேற்பார்வையாளர்கள், 182 தேர்தல் அலுவலர்கள் மற்றும் 494 உதவி தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சாதனை மேல் சாதனை.. முன்னிலையால் குஷியான பாஜகவினர்...

ABOUT THE AUTHOR

...view details