புதுடெல்லி:இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி அக்.9 மாலை அறிவித்தார். 1026-27 வரை அப்பகுதியை ஆட்சி செய்த சாளுக்கிய மரபைச் சேர்ந்த இரண்டாம் பீமன் என்ற மன்னரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சூரியக் கோயில் இங்குள்ளது.
இக்கிராமத்தில், 1000-க்கும் அதிகமான வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனல்கள் இலவசமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.