தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி போட்டாதான் சாப்பாடு - இல்லைனா அப்படியே போய்டு - கரோனா தடுப்பூசி

ஹோட்டலில் சாப்பிட வேண்டுமென்றால் கரோனா தொற்று தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும் என குஜராத் ஹோட்டல் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி தெரிவித்துள்ளார்.

corona vaccination
corona vaccination

By

Published : Sep 24, 2021, 1:39 PM IST

காந்திநகர்: கரோனா தொற்றின் காரணமாக தற்போது தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் அதனை செலுத்திக்கொள்ள வேண்டி அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அதேசமயம் வியாபாரிகளும், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் பொருள்களையும் கொடுக்கின்றனர். அந்தவகையில், குஜராத் மாநிலத்தின் ரெஸ்டாரண்ட் மற்றும் ஹோட்டல் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. குஜராத் மாநிலத்தில் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டுமென்றால் கரோனா தொற்று தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும். அப்படி செலுத்தியிருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை ரெஸ்டாரண்ட்டில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இதனை உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெத்தியடி - மாணவர்களிடம் மாற்றத்தை விதைக்கும் கேரளா

ABOUT THE AUTHOR

...view details