தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி அவதூறு வழக்கு... ராகுலின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்தாகுமா? குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! - ராகுல் காந்தி மோடி பெயர் அவதூறு வழக்கு

மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் குஜராத் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jul 6, 2023, 11:07 PM IST

குஜராத் : மோடி பெயர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டது.

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மோடி பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே சூரத் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் இருந்தார். இந்நிலையில், ஜூலை 7ஆம் தேதி வழக்கில் குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதையும் படிங்க :மணிப்பூர் கலவரம் : பள்ளி முன் பெண் சுட்டுக் கொலை! தொடரும் துயரச் சம்பவங்கள்!

ABOUT THE AUTHOR

...view details