அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வில், அவர் கருத்தரித்து இருந்தார். 26 வார கருவை அவர் சுமந்த் நிலையி, தற்போது அவர், குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு உடல்நிலை இல்லை. அவர் தற்போது மனதளவிளும், உடல் அளவிலும் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளதால், அந்த கருவை கலைக்க அனுமதி கோரி, ஆகஸ்ட் 22ஆம் தேதி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் அந்த பெண், தற்போது இல்லை. உடல் அளவிலும், மனதளவிலும் அப்பெண் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளதாக, அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருந்த நிலையில், அபபெண்ணின் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க பரிந்துரைத்து இருந்தது.
இந்த நிலையில், அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீர் ஜே டேவ் தலைமையிலான அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணை, மருத்துவ வாரிய மருத்துவர்கள் முழுவதுமாக பரிசோதனை செய்து, அதுகுறித்த அறிக்கையை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.