நர்மதா:குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் பொய்ச்சா கிராமத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் அம்மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத் கலந்து கொண்டு, விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மக்கள் ஜெய் கோமாதா என கோஷமிடுகிறார்கள்.
"இந்துக்கள் கபடவாதிகள்" - குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத் சர்ச்சைப் பேச்சு
குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத், இந்துக்களை கபடவாதிகள் என்று கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Gujarat
ஆனால், தாங்கள் வளர்க்கும் பசு, பால் கொடுப்பதை நிறுத்தியவுடன், அதனை தெருவில் விட்டுவிடுகிறார்கள். அதனால்தான் கூறுகிறேன் இந்துக்கள் கபடவாதிகள். அவர்கள் சுயநலத்திற்காக ஜெய் கோமாதா என்று முழங்குகிறார்கள். மக்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் கடவுள் ஆசி தானாகவே கிடைக்கும். ரசாயன உரங்களை பயன்படுத்தி உயிர்களை கொல்லாதீர்கள், நீங்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் கால்நடைகளுக்கும் நல்லது" என்று கூறினார்.