குஜராத் மாநிலம் பருச் மாவட்டத்தில் அமைந்துள்ளது நலன்புரி கோவிட் மருத்துவமனை. இங்கு இன்று (மே.1) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 12 நோயாளிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து- 16 பேர் உயிரிழப்பு
06:10 May 01
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இது குறித்து அம்மாவட்ட காவல்துறையினர் ஒருவர் கூறுகையில், “படேல் நலன்புரி கோவிட் மருத்துவமனையில் ஐசியூ யூனிட் ஒன்றில் இன்று (மே.1) அதிகாலை குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். கோவிட் மருத்துவமனையில் தீ விபத்தால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.