அகமதாபாத்: குஜராத் மாநிலம் வஸ்தரபூர் பகுதியில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் குல்திப் சிங் யாதவ் என்பவர் அவரது மனைவி ரிதி, 3 வயது பெண் குழந்தை அகாங்க்ஷி ஆகியோருடன் 12ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதுகுகுறித்து வஸ்தரபூர் போலீசார் தரப்பில் "இந்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்துள்ளது. அதிகாலை உடல்களை கண்ட அக்கம் பக்கத்தினர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
குடும்ப தகராறு காரணமாக 12ஆவது மாடியிலிருந்து மனைவி, மகளுடன் குதித்த கான்ஸ்டபிள் - vasthapur police station
குஜராத் மாநிலத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளுடன் 12 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Etv Bharatகுடும்ப தகராறால் 12 ஆவது மாடியிலிருந்து குடும்பத்துடன் குதித்து கான்ஸ்டபிள் தற்கொலை
முதல்கட்ட விசாரணையில், முதலில் ரித்தி முதலில் குதித்ததும், பின்னர் யாதவ் தனது மகளுடன் குதித்ததும் தெரியவந்துள்ளது. அதோடு அதே மாடியில் வசிக்கும் யாதவின் சகோதரிக்கும் அவரது குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் ரிதி மண உளைச்சலில் இருந்துவந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மாரடைப்பு ஏற்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழப்பு... மயக்க மருந்து காரணமா?
Last Updated : Sep 8, 2022, 9:17 AM IST