தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா - எந்த பதவி வழங்கினாலும் அதை ஏற்க தயார்

குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா
குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா

By

Published : Sep 11, 2021, 3:15 PM IST

Updated : Sep 11, 2021, 4:23 PM IST

15:11 September 11

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். 

இந்நிலையில் இன்று அவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் வழங்கினார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பதவி விலகியதாக கூறினார். கட்சியில் எந்த பதவி வழங்கினாலும் அதை ஏற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்  விஜய் ரூபானி.

Last Updated : Sep 11, 2021, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details