காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆனந்தா மாவட்டத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே நிலத்தகராறு இருந்துவருகிறது. இந்த நிலையில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் கட்டுமானப் பணிகளுக்காக விவகாரமான நிலத்தில் நேற்று (ஜூன் 11) செங்கற்களை அடுக்கிவைத்தார்.
இதற்கு மாற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வாக்குவாதம் மோதலாக மாறி இரு தரப்பினரும் அதே செங்கற்களை வீசிக்கொண்டு தாக்குதல் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சமாதானம் செய்ய முற்பட்டனர். அப்போதும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் தாக்கியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர் உள்பட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு அம்பாவிதம் நிகழா வண்ணம் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உத்தரப் பிரதேசம் வன்முறை: முக்கிய புள்ளிகளின் வீடுகள் இடிப்பு