அகமதாபாத்:குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ.க., 156 இடங்களைக் கைப்பற்றி வரலாறு காணாத வெற்றி பெற்றது. கடந்த 1960ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் எந்த கட்சியும் வென்றிராத வகையில், தொடர்ந்து 7 முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பா.ஜ.க. புது வரலாறு படைத்தது.
இந்நிலையில், நாளை (டிசம்பர் 10) பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காந்திநகரில் நடைபெறுகிறது. சம்பிரதாய கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க. தலைமைக் கொறடா பங்கஜ் தேசாய் தெரிவித்தார்.