தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. ஐஐடி எம்.டெக் பட்டதாரியின் பின்புலம் என்ன? - ஆதர்ஷ் நகரில் வசிக்கும் அமன் சக்சேனா

பிரதமர் மோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharatபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது - பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி நடவடிக்கை
Etv Bharatபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது - பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி நடவடிக்கை

By

Published : Nov 28, 2022, 8:43 PM IST

அகமதாபாத்:பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக உத்தரபிரதேச மாநிலம் படவுனில் உள்ள ஆதர்ஷ் நகரில் வசிக்கும் அமன் சக்சேனா என்ற இளைஞரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துறையினர் சனிக்கிழமை (நவ.26)இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் குஜராத் மாநில தேர்தலுக்காக ஜாம்நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி இன்று(நவ.28) பங்கேற்றார். இந்த பேரணியில் பங்கேற்பதை தடுக்க மிரட்டி மின்னஞ்சல் அனுப்பியதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Mumbai IIT)பிடெக் பட்டம் பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புத் துறையினரின் விசாரணையை அடுத்து ஆதர்ஷ் நகரில் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட்டு சக்சேனாவை கைது செய்தனர்.

இதையும் படிங்க:"கே.சி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஐ.டி. ரெய்டு இருக்காது" - தெலங்கானா அமைச்சர் பேச்சு..

ABOUT THE AUTHOR

...view details