தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல்: ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் - என்னவாம்? - gujarat elections

போட்டி கட்சிகளின் முயற்சியால் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்ற பயத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை மறைமுகமான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.

ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள்
ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள்

By

Published : Nov 17, 2022, 7:53 PM IST

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற வைக்கும் போட்டிக்கட்சிகளின் முயற்சிகளுக்கு, மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் மறைமுகமான இடங்களுக்கு மாற்றியுள்ளனர்.

தங்களது வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலை வாபஸ் பெறவைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆம் ஆத்மி கட்சியினை விட்டு மற்றொரு கட்சிக்குத் தாவுகின்றனர். இதனைத் தடுக்கவே, இந்த நடவடிக்கை எனக்கூறப்படுகிறது.

இதனிடையே , சூரத் நகரின் லிம்பாயத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நேபாள பொதுத் தேர்தலை பார்வையிட இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அழைப்பு...!

ABOUT THE AUTHOR

...view details