தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: பிரியும் வாக்கு வங்கி.. ஓர் அலசல்! - Gujarat election update

குஜராத் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில், பல்வேறு நிலைகளில் வாக்குகள் பிரிய உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

குஜராத் தேர்தல்: பல நிலைகளில் பிரியும் வாக்கு வங்கி.. ஓர் அலசல்!
குஜராத் தேர்தல்: பல நிலைகளில் பிரியும் வாக்கு வங்கி.. ஓர் அலசல்!

By

Published : Nov 30, 2022, 1:26 PM IST

குஜராத்:சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிச 1) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான சூறாவளிப் பிரச்சாரம் நேற்று (நவ. 29) மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதற்கட்ட வாக்குப்பதிவில் 49,87,000 ஆண் வாக்காளர்கள் மற்றும் 45,71,000 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 95,63,000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் 6,215 நகர்புற வாக்கு மையங்களில் 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 3,331 வாக்கு மையங்களில் உள்ள 9,014 வாக்குச்சாவடிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கிராமங்களை பொறுத்தவரை 11,071 வாக்கு மையங்களில் உள்ள 16,416 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் மொத்தமாக 70,763 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 70,763 கண்ட்ரோல் யூனிட்களும் மற்றும் 79,183 விவிபாட்களும் குஜராத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்காக 34,324 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 34,324 கண்ட்ரோல் யூனிட்களும் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட உள்ளன.

அதிக வாய்ப்பு: இதில் மாவட்டம் வாரியாக பார்க்கும்போது சூரத் 16, தபி 2, டாங் 1, நவ்சாரி 4, பருச்சி 5, வல்சாத் 5, நர்மதா 2 இடங்களும் உள்ளன. அதிக வாய்ப்புள்ள இடங்களைப் பொறுத்தவரை, நர்மதா தொகுதியில் பாஜக சார்பில் மகேஷ் வாசவா, ஜம்புசார் தொகுதியில் டிகே சுவாமி (பாஜக), வாக்ராவில் அருண் ராணா (பாஜக), ஜங்காரியாவில் சோட்டு வாசவா (சுயேட்சை), அங்கிளேஷ்வரில் விஜய்சிங் படேல் (காங்கிரஸ்) மற்றும் அவரது சகோதரர் ஈஸ்வர்சிங் படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அல்பாத் தொகுதியில், தர்மிக் மால்வியா (ஆம் ஆத்மி), முகேஷ் படேல் (பாஜக), மங்ரோல் தொகுதியில் தர்ஷன் நாயக் (காங்கிரஸ்), மாண்ட்வியில் கன்பத் வசாவா (பாஜக), அனில் சவுத்ரி (காங்கிரஸ்), சூரத் கிழக்கில் (ஆம் ஆத்மி), வராச்சா தொகுதியில் அரவிந்த் ராணா (பாஜக), பாஜகவின் குமார் கனானி, லிம்பயத் தொகுதியில் காங்கிரஸின் பிரபுல்லா தொகாடியா மற்றும் ஆம் ஆத்மியின் அல்பேஷ் கதிரியா, லபோரா தொகுதியில் பாஜகவின் சங்கீதா பாட்டீல், பாஜகவின் ஹர்ஷ் சங்வி, கதிர்காமில் இருந்து காங்கிரஸின் பல்வந்த் ஜெயின், ஆம் ஆத்மியின் பிவிஎஸ் சர்மா, காங்கிரஸின் வினோத் மொராடியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆதிக்கம் செலுத்தும் மக்கள்: மேலும் முதற்கட்ட வாக்குப்பதிவில் படேல் மற்றும் பழங்குடியின வாக்கு வங்கிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. தெற்கு குஜராத்தில் மொத்தமுள்ள 35 இடங்களில் 14 பழங்குடியின தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத்தில் இதுவரை 14 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சூரத்தில் உள்ள பர்தோலி, மாண்ட்வி, மஹுவா, அல்பாட், கம்ரேஜ் மற்றும் மங்ரோல் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கோலி படேல் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பர்தோலி சட்டமன்றத் தொகுதி, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. காம்ரேஜ் சட்டமன்றத் தொகுதியில் சவுராஷ்டிரா மக்கள் அதிகளவில் உள்ளனர்.

மஹுவாவில் சவுத்ரி மற்றும் தோடியா சமூகத்தினரும், மாண்ட்வியில் கிறிஸ்தவ வாக்குகளும் உள்ளன. அதேநேரம் மாண்ட்வி தாலுகாவில் சவுத்ரி மற்றும் வாசவா சமூகங்கள் அதிக வாக்குகளோடு உள்ளனர். மங்ரோல் சட்டமன்றம் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் வசவா சமூகத்தினர் உள்ளனர். எனவே இந்த தேர்தல் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என்ற மும்முனைப் போட்டியாக மட்டுமல்லாமல், பல்வேறு நிலைகளிலும் வாக்கு வங்கி பிரியும் நிலை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு பலம்... விரிவான அலசல்...

ABOUT THE AUTHOR

...view details