தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு - Gujarat assembly election date

குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் எப்போது?
குஜராத் சட்டமன்ற தேர்தல் எப்போது?

By

Published : Nov 3, 2022, 12:30 PM IST

Updated : Nov 3, 2022, 12:49 PM IST

டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் எனறு தெரிவித்தார். இதனையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான மனுத்தாக்கல் நவம்பர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 14 அன்றுடன் முடிவடையும். மேலும் நவம்பர் 17 அன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் எனவும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான மனுத்தாக்கல் நவம்பர் 10 அன்று தொடங்கி, நவம்பர் 17 அன்று முடிவடையும். மேலும் நவம்பர் 21 அன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் எனவும் அறிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

குஜராத்தில் 4.90 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறினார்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய குஜராத் சட்டசபையின் காலம் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

Last Updated : Nov 3, 2022, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details