குஜராத் மாநிலம் பாருச் பகுதியில் கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், செவிலியர் இருவரும் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு முற்றிலுமாகத் தீக்கிரையானது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில அரசு இந்த விபத்து தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
குஜராத் மருத்துவமனைகளில் இதுபோன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், இதற்கு மாநில அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:Election Results Live Updates: துரைமுருகன் முன்னிலை