தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் உயிரிழப்பு - குஜராத் மாநில செய்திகள்

குஜராத்: ஆனந்த் மாவட்டத்தில் இன்று (ஜூன் 16) காலை கார்- டிரக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்
கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்

By

Published : Jun 16, 2021, 12:14 PM IST

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூர் நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்து அதிகமாக நடைபெறுகிறது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) காலை சூரத்திலிருந்து- சௌராஷ்டிரா நோக்கி டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரக் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

கார்- டிரக் நேருக்கு நேர் மோதல்

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:'ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு விசா'

ABOUT THE AUTHOR

...view details