தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட 4 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு! - 4 COVID-19 patients die

அகமதாபாத்: ஆயுஷ் மருத்துவமனையில் நேற்றிரவு(ஏப்.25) ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Apr 26, 2021, 8:58 PM IST

குஜராத் மாநிலம், சூரத்தில் அமைந்துள்ள ஆயுஷ் மருத்துவமனையின் ஐசியு வார்டான ஐந்தாவது தளத்தில் நேற்றிரவு (ஏப்.25) தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சுமார் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 கரோனா நோயாளிகளை பத்திரமாக மீட்டு, ஸ்மைமர் சிவில் மருத்துவமனை மற்றும் சஞ்சீவானி என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.

இருப்பினும், மீட்கப்பட்ட 16 நோயாளிகளில் மூன்று பேர் சஞ்சீவானி மருத்துவமனையிலும், ஒருவர் ஸ்மைமர் சிவில் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை சூரத் மாநகராட்சியின் சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆஷிஷ் நாயக் உறுதி செய்துள்ளார்.

ஆயுஷ் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் இருந்த குளிரூட்டும் சாதனங்கள் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details