மகாராஷ்டிரா:மும்பையில் பிரபல தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் கணக்கை ஆய்வு செய்த மாகாராஷ்டிரா மாநில ஜிஎஸ்டி அமைப்பினர், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சந்தேகித்து, பின் இது தொடர்பான தகவலை வருமான வரித்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சாமுண்டா புல்லியனுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில், ஜிஎஸ்டி அமைப்பினரும், வருமான வரித்துறை அலுவலர்களும் இணைந்து சோதனை நடத்தினர். பல மணி நேரம் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தரைக்கடியில் கோடிக்கணக்கில் பணம் இதனிடையே தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் வீட்டை ஆய்வு செய்த அலுவலர்கள், சந்தேகத்தின் அடிப்படையில், தரை மற்றும் சுவர் பகுதிகளை இடித்தனர். அப்போது, ரூ.9.78 கோடி ரொக்கமும், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ வெள்ளி செங்கற்களும் இருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து அந்த வீட்டைச் சீல் வைத்தனர்.
இந்த வழக்கில் கைதைத் தவிர்க்க தொழிலதிபர் சாமுண்டா புல்லியன் மும்பை செஷன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இருப்பினும், முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள், தொழிலதிபர் சாமுண்டா புல்லியனை விசாரணைக்காக ஜிஎஸ்டி அலுவலர்கள் முன்பு ஆஜராக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்