2021 மே மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை ஒன்றிய நிதியமைச்சகம் இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதம் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. மொத்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 709 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 17 ஆயிரத்து 592 கோடி ரூபாயாக உள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 22 ஆயிரத்து 653 கோடி ரூபாயாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 53 ஆயிரத்து 199 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் செஸ் வரி வசூல் ஒன்பதாயிரத்து 265 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.