டெல்லி: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் நேற்று (டிச. 20) பதிலளித்தனர்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.17,176 கோடி நிலுவையில் இருப்பதாக இணை அமைச்சர்பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதராமன் பேசும்போது, தற்போதைய நிலவரப்படி ஜூன் வரையிலான அனைத்து நிலுவை தொகைகளையும் ஓரளவு செலுத்திவிட்டதால், நிலுவையில் உள்ள ரூ.17,000 கோடியும் விரைவில் வழங்கப்பட உள்ளது என கூறினார்.