டெல்லி:சரக்கு மற்றும் சேவை வரிகளான ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது, இருப்பினும் நாடு கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிருப்பதால் அவைகளின் பரிந்துரைக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் நேற்று(மே 19) தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஜி.எஸ்.டி.யில் சட்டம் இயற்றுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரங்கள் உள்ளன, ஆனால் அவை செயல்படக்கூடிய தீர்வை எட்டுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் இணக்கமான முறையில் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
சட்டப்பிரிவு 246A இன் படி, வரிவிதிப்பு செயல்பாடுகளில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் சம அதிகாரம் உள்ளது என்று அமர்வு கூறியது.மேலும் பிரிவு 246A, மையத்தையும் மாநிலத்தையும் சமமாக கருதி இணக்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என கூறுகிறது. அரசியலமைப்பின் 279வது பிரிவின் படி மத்தியமும் மாநிலமும் தனித்தனியாக செயல்பட முடியாது என்று கூறுகிறது.