டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நேற்றுடன்(அக்.20) முடிவடைந்தது. ஆனால், நேற்று ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்வதற்கான இணையதளத்தின் வேகம் குறைவாக இருந்தது. இதனால் வரி செலுத்துவோர் பலரும், தங்களது கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் திணறினர். இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்திருந்தனர்.
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய இன்று இரவு 12 மணி வரை அவகாசம்! - ஜிஎஸ்டி கவுன்சில்
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 12 மணி வரை கணக்கு தாக்கல் செய்யலாம்.
gst
இதனால், செப்டம்பர் மாத ஜிஎஸ்டி கணக்கை செலுத்த மேலும் ஒரு நாள் கால அவகாசம் வழங்கி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை (சிபிஐசி) உத்தரவிட்டுள்ளது. நேற்று ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய முடியாதவர்கள், இன்று இரவு 12 மணி வரை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாவே இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.