முதலில் புதிய கண்டுபிடிப்பாக அறிமுகமாக்கப்பட்ட ’ஆன்லைன் ஷாப்பிங்’ முறை, கடந்த கோவிட் காலகட்டங்களில் இயல்பான ஒரு முறையாக மாறிவிட்டது. பால், தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், மருந்துகள், அசைவ உணவுகள் என அனைத்தும் ஒரே கிளிக்கில் வீடு தேடி வந்துவிடும் நிலை உண்டாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைகள் அதிகமாக பெருகியுள்ளன. ஹைதராபாத், சென்னை போன்ற அதிகமான அசைவ பிரியர்கள் வாழும் நகரத்தில், ஞாயிறுகளில் கறிக்கடையில் குவியும் நீண்ட கியூவை ‘லிசியஸ்’, ’டெண்டர் கட்ஸ்’ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் குறைத்துள்ளன.
பல பெரிய சூப்பர் மார்க்கெட்களும், ஏனைய சிறு மளிகை கடைகளும் மளிகை சாமான்களை வீட்டிலேயே டெலிவெரி செய்கின்றன. ‘பிக் பாஸ்கெட்’, ‘டுன்சோ’, ‘ரிலையன்ஸ் மார்ட்’, ‘அமேசான்’, ‘ ஃபிளிப் கார்ட்’ போன்ற செயலிகள் மளிகைப் பொருட்களை வீட்டிலேயே டெலிவரி செய்யப்பயன்படுகிறது. ஜவுளிகள் வாங்க ’ஸ்னாப் டீல்’, ‘மிண்ட்ரா’ போன்ற செயலிகள் இருக்கின்றன.