தமிழ்நாடு

tamil nadu

டூல்கிட் விவகாரம்: மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்!

டெல்லி: டூல்கிட் விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், மேலும் இரண்டு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 15, 2021, 1:38 PM IST

Published : Feb 15, 2021, 1:38 PM IST

திஷா ரவி
திஷா ரவி

விவசாயிகளுக்கு ஆதரவாக டூல்கிட் என்ற இணைய ஆவணத்தை பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டூல்கிட் விவகாரம் தொடர்பாக நிகிதா ஜேக்கப், சாந்தனு என மேலும் இருவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போயட்டிக் ஜஸ்டீஸ் பவுண்டேஷன் என்ற காலிஸ்தான் அமைப்புதான் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டை தயாரித்ததாக டெல்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு ட்விட்டர் பரப்புரையை மேற்கொள்ள அந்த காலிஸ்தான் அமைப்பு நிகிதா ஜேக்கப்பை தொடர்பு கொண்டதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி, தேச விரோதம், சதி செயல் உள்பட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞரின்றி அவர் ஆஜர்படுத்தப்பட்டு ஐந்து நாள் காவலில் அடைக்கப்பட்டார். பல எதிர்க்கட்சி தலைவர்கள், இந்த கைது நடவடிக்கையை கண்டித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details