ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஹரி சிங் தெருவில் இன்று (ஆக.10) பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவர்கள் கையெறி குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் மீது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் பிரத்யேக காட்சிகள் இரண்டு நாள் பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் வந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் ராகுல் காந்தி ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றினார்.
மேலும் இந்திய சுதந்திர தினத்திற்கு நான்கு நாள்கள் இருக்கும் நிலையில், இத்தாக்குதல் பாதுகாப்பு படையினருக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட ஹரி சிங் தெரு, மக்கள் அதிகம் கூடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும் தமிழ்நாடு மறைமுகமாகவும் தாக்கப்படுகிறது- ராகுல் காந்தி