சண்டிகர்:பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் ராம் லால் என்பவருக்கு நேற்று (டிசம்பர் 2) இரவு 8:50 மணியளவில் செல்போன் அழைப்பு ஒன்று வந்ததுள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ. 1 கோடி பணத்தை நான் சொல்லும் இடத்தில் வந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்... பேரனை கைது செய்த போலீசார்... தாத்தா அதிர்ச்சி...
பஞ்சாப் மாநிலத்தில் சொந்த தாத்தாவிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பேரன் கைது செய்யப்பட்டார்.
இதனால் ராம் லால், ஷாபூர் கண்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதோடு தனக்கு வந்த செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். இந்த எண்ணை டிரேஸ் செய்த போலீசார் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் ராம் லாலில் பேரன் ராகுல் லால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்துள்ளது. இதனால் ராம் லால் அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் புகாரை திரும்பப்பெறவில்லை. ராகுல் லால் மீது தகவல்தொழில்நுட்ப மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சொத்துக்காக கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த மனைவி