கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் வசித்து வருபவர் லிசி ஜார்ஜ். இவரது வீட்டில் வளர்க்கப்படும் கோழி ஒன்று, கடந்த இரண்டு நாள்களாக சாதாரண அளவைக் காட்டிலும் எடை கூடிய முட்டைகளை இட்டு வருகிறது. ’கிராமப்பிரியா’ எனப்படும் இனத்தைச் சேர்ந்த இந்தக் கோழி இட்ட முட்டைகளின் எடை மொத்தம் 176 கிராம்.
வழக்கமாக, வாத்து, கினியா கோழி ஆகியவற்றின் முட்டைகள் முறையே 70 கிராம் மற்றும் 80 கிராம் எடையைக் கொண்டிருக்கும். ஆனால் இந்தக் கோழி அதனைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக எடையுடைய முட்டைகளை இட்டுள்ளது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.