தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீதிமன்றம் முன்பு கட்டில், பீரோவுடன் பட்டதாரி பெண் போராட்டம் - graduate girl protest front of the court in puducherry

புதுச்சேரி: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பட்டதாரி பெண் நீதிமன்றம் முன்பு கட்டில், பீரோவுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பட்டதாரி பெண் போராட்டம்
பட்டதாரி பெண் போராட்டம்

By

Published : Nov 6, 2020, 2:15 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மகள் எழில்மலர் (40). பி.எஸ்சி. பட்டதாரி.

இவருக்கும் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசு கல்லூரி விரிவுரையாளர் கருணாகரனுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

கணவன் வீட்டில் இருந்து வரதட்சணையாக இரண்டரை லட்சம் ரூபாய் கேட்டு அவரை துன்புறுத்தியுள்னர். மேலும் அந்த பெண்ணை அவரது கணவர் தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

பட்டதாரி பெண் போராட்டம்

திரும்ப அழைத்துச் செல்ல கணவர் வராததால் அந்த பெண் புதுச்சேரி குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவகாரத்து கிடைத்த நிலையில், பட்டதாரி பெண்ணின் கணவர் கருணாகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதுபற்றி தெரியவந்ததையடுத்து எழில்மலர் தனக்கு வாழ வழி ஏற்படுத்தி தரவேண்டும் எனக் கோரி தனது பெற்றோர் வீட்டில் இருந்து கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்து வந்து நீதிமன்றம் முன்பு அமர்ந்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறு - செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி பெண் போராட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details