சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்தும் விதமாக புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் டெல்லி தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டனர்.
அப்போது பேசிய ரவி சங்கர் பிரசாத், "சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகளை கண்காணிக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களின் வளர்ச்சியில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆகவே, வணிகத்தில் ஈடுபட அவர்களை இங்கு அழைக்கிறோம்.
விமர்சனங்களுக்கும் கருத்து வேறுபாட்டிற்கும் அரசு வரவேற்பு தெரிவிக்கும் அதே வேளையில், அவதூறு கருத்துகள் தெரிவிப்பதற்கு எதிராக சமூக வலைதள பயனாளிகளுக்கு குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கி தருவது முக்கியத்துவம் பெறுகிறது.
சமூக வலைதளங்களில் சமரசம் செய்து கொள்வது சரியானதாக இருக்க முடியாது. எனவே, வலுவான குறை தீர் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம். சமூக வலைதளத்தை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்துவருகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து புகார் வந்த வண்ணம் உள்ளது" என்றார்.
இணையதளங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பயனாளிகளின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவரும் நிலையில், புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.