புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் அரசு செவி சாய்க்க வேண்டும் - ராகுல் காந்தி
டெல்லி: வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளிடம் அரசு செவி சாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், விவசாயிகளிடம் அரசு செவி சாய்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, டிசம்பர் 24ஆம் தேதி, வேளாண் சட்டங்களை நீக்கக் கோரும் இரண்டு கோடி கையெழுத்து படிவங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராகுல் காந்தி வழங்கினார்.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உடன் இருந்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. அச்சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடிவருகின்றனர்" என்றார்.