இந்தியாவில் கடுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்வது கடினமாக உள்ளது என நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் நேற்று தெரிவித்திருந்தார்.
அதிகடிப்படியான ஜனநாயகம் இருப்பதன் காரணமாகவே சுரங்கம், நிலக்கரி, தொழிலாளர் நலன், வேளாண் உள்ளிட்ட துறைகளில் சீருதிருத்தம் மேற்கொள்வது கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமிதாப் காந்தின் கருத்தை பலர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஜனநாயகத்திலிருந்து விடுபட நினைப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்கள் மூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. எனவேதான், அது ஜனநாயகத்திலிருந்து விடுபட நினைக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.