தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னையில் புதிய விமான பராமரிப்பு மையம் - ஜோதிராதித்ய சிந்தியா - MRO centre in Chennai

தமிழ்நாட்டில் புதிய விமான பராமரிப்பு மையம் உருவாக்கப்படும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

By

Published : Sep 9, 2021, 7:27 PM IST

விமானப் போக்குவரத்துறையின் 100 நாள் கொள்கைத் திட்டத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டத்தின் கீழ் 16 துறைகளில் கவனம் செலுத்தி விமானப் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும் என்றார்.

அத்துடன், விமானப் பயணிகள் ரீபண்ட் தொகையை ஆன்லைம் மூலம் எளிதாகத் திரும்ப செலுத்தும் வகையில் ஏர்சேவை 3.0 என்ற போர்டல் தொடங்கப்படும் என்றார்.

விமான சேவை தரத்தை உயர்த்தும் விதமாக சென்னை, ஹைதராபாத், போபால், டெல்லி, ஜுஹு, கொல்கத்தா, திருப்பதி ஆகிய நகரங்களில் பராமரிப்பு, பழுது மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

கோவிட் தொற்று காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளான விமானப் போக்குவரத்துத்துறை தற்போது மீட்பு பாதையில் நடைபோடுவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி மானியம் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details