தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல் - Supreme Court

உயர் நீதிமன்றங்களில் முடிவற்ற சட்டப்பூர்வ மேல்முறையீடுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல்
முடிவற்ற மேல்முறையீடுகளால் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும் - அட்டர்னி ஜெனரல்

By

Published : Nov 26, 2022, 4:57 PM IST

உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ 26) இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “அனைத்து குடிமக்களுக்கும் தகவல் கிடைக்க தொழில்நுட்பம் மற்றும் நீதியை ஒருங்கிணைக்க அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

டெலி-லா சேவைகள் மூலம் முன் வழக்குகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு இச்சேவை கிடைக்க உள்ளது. இது நீதித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் சிவில், கிரிமினல் போன்ற சொற்களை பட்டியலிட்டுள்ளது.

ஏற்கனவே 65,000 சொற்களின் சொற்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, “அனைத்து துறைகளுக்கும் தீர்வு காணும் பிரிவு இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் சட்ட தகராறில் ஈடுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

உயர் நீதிமன்றங்களில் முடிவற்ற சட்டப்பூர்வ மேல்முறையீடுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் சுமையை அரசு நிறுத்த வேண்டும். சட்ட சீர்திருத்தப் பிரிவு, ஆராய்ச்சிப் பிரிவு, கல்விப் பிரிவு ஆகியவற்றுக்கு நிரந்தர சட்ட ஆணையம் தேவை. உயர் நீதிமன்றங்களின் நெரிசலைக் குறைக்க வேண்டும். மேற்கு நாடுகள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வரும் ஒரு நாளை எதிர்நோக்குகிறேன்” என கூறினார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதே நீதித்துறையின் முன் உள்ள முக்கிய சவாலாக உள்ளது. நீதித்துறை மக்களை சென்றடைவது அவசியம் மற்றும் மக்கள் நீதித்துறையை அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பை சிதைக்கக்கூடாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசியல்வாதிகளை அதிரவைத்த சேஷன்.. உச்ச நீதிமன்றம் நினைவு கூறியது ஏன்?

ABOUT THE AUTHOR

...view details