கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்லியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி! - ராகுல் காந்தி
டெல்லி: வெளிமாநில தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இந்நிலையில், இச்சூழலில் வெளிமாநில தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர். எனவே, அவர்களின் வங்கி கணக்குகளில் பணம் போடுவது மத்திய அரசின் பொறுப்பு. கரோனா பரவலுக்கு மக்களே காரணம் என குற்றம்சாட்டும் அரசு, இந்த பொதுநலப் பணியை மேற்கொள்ளுமா?" என பதிவிட்டுள்ளார்.